Subscribe Us

Friday, May 1, 2020

ஊரடங்கை மீறினால் ரூ.100 அபராதத்துடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்


தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது. குறிப்பாக மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் என்றும் இல்லாத படி நேற்று ஒரே நாளில் 138 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை சென்னையில் மட்டுமே 906 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக திரு.வி.க நகரில் -210, ராயபுரம் - 199, தேனாம்பேட்டை - 105, தண்டையார் பேட்டை - 77, கோடம்பாக்கம் - 97, அண்ணா நகர் - 86 என மேற்கூறிய 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி உள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளை மீறினால் 100 ரூபாய் அபராதத்துடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். விதிகளை மீறி செயல்படும் கடைகள், நிறுவனங்கள் மற்றும் அலுவலங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்படும்" என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed