Subscribe Us

Wednesday, May 6, 2020

10ம் வகுப்பு தேர்வு ஜூனில் அட்டவணை ஜூனில்


ஈரோடு : ''எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு அட்டவணை, ஜூன், மூன்றாவது வாரம் வெளியிடப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடில், அவர் அளித்த பேட்டி:ஈரோடு மாவட்டத்தில், 21 நாட்களாக, புதிய தொற்று இல்லாத நிலை நீடிக்கிறது. இதற்காக, மாவட்ட நிர்வாகத்துக்கும், ஒத்துழைப்பு வழங்கிய மக்களுக்கும் நன்றி.வரும் நாட்களிலும், புதிய தொற்று ஏற்படாமல் இருக்க, மக்கள் ஒத்துழைக்க வேண்டும். கொரோனா தொற்று நிறைவு பெற்ற பின், ஜூன் மாதம், பிளஸ் 2 வினாத்தாள் திருத்தும் பணி துவங்கும்.முதல்வருடன் ஆலோசித்து, இதற்கான தேதி அறிவிக்கப்படும். அதுபோல, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுக்கான அட்டவணை, ஜூன் மூன்றாவது வாரம் வெளியிடப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Popular Feed