JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Wednesday, May 6, 2020

11-ம் வகுப்புக்கு எஞ்சியுள்ள ஒரு தேர்வு ரத்து செய்யப்படமாட்டாது - பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்


11-ம் வகுப்புக்கு எஞ்சியுள்ள ஒரு தேர்வு ரத்து செய்யப்படமாட்டாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இதுவரை 49,400 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,600-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், இந்தியா முழுவதும் மே -17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அனைத்து பள்ளி, கல்லூரிகள், கடைகள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் வணிக வளாகங்கள், திரையரங்குகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், கொரோனாவுக்கு தீர்வு கண்டவுடன் 11-ம் வகுப்புக்கு எஞ்சியுள்ள ஒரு தேர்வு எப்போது என அறிவிக்கப்படும் என்றும், இந்த ஒரு தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment