
சென்னை,
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, வருகிற மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். மே 17 ஆம் தேதியுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில் மேலும் நீட்டித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனால், +2 விடைத் தாள்களை திருத்தும் பணி நடைபெற மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. ஊரடங்கு காலத்தில் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் தனியார் மற்றும் வியாபார நிறுவனங்களின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளுக்காக மட்டும் குறைந்தபட்சம் பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.