Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, May 9, 2020

80% சதவீத பாடப்புத்தகங்கள் தயார்; பள்ளிகள் தொடங்கியவுடன் பாட புத்தகங்கள், காலணி உள்ளிட்டவை வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்


பள்ளிகளுக்கு வழங்க 80% சதவீத பாடப்புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று இருக்கும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை. கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன் குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சாவக்காட்டு பாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:- பள்ளிகளுக்கு வழங்க 80% சதவீத பாடப்புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன. கொரோனா தொற்று இருக்கும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை. கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன் குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
அதன் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்-அமைச்சர் அறிவிப்பார்.
2 ஆயிரம் கணித ஆசிரியர்களுக்கு தனியார் நிறுவனத்தினர் ஆன்லைனில் பயிற்சி அளித்து வருகின்றனர். நாளை மறுதினம் ஆடிட்டர் தேர்வுக்கு ஆன் லைன் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு தேர்வு உறுதியாக நடைபெறும். கொரோனா நோய் தொற்றுக்கு தீர்வு காணப்பட்டவுடன் மருத்துவ குழுவினர் ஆலோசனையின் பேரில் உயர் மட்ட குழுவின் பரிந்துரை அடிப்படையில் 10-ம் வகுப்பு பொது தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும். பள்ளிகள் திறந்ததும் மாணவ- மாணவிகளுக்கு சமூக இடைவெளி குறித்து கற்றுத்தரப்படும். பள்ளிகள் தொடங்கியவுடன் பாட புத்தகங்கள், காலணி உள்ளிட்டவை வழங்கப்படும். மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி தனியார் பள்ளிகள் கட்டணம் பெற வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment