Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, May 9, 2020

அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்



பெரும்புதூர்: தமிழக அரசு சார்பில் அறிவிக்கபட்டுள்ள அரசு ஊழியர்கள் சரண்டர் விடுப்பு ரத்து, அகவிலைப்படி முடக்கம், ஜிபிஎப், வட்டி குறைப்பு, ஓராண்டு கால பணி ஓய்வு மறுப்பு ஆகிய அரசின் தொடர் தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி, பெரும்புதூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு பெரும்புதூர் வட்ட கிளை துணைத் தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் ரஞ்சித் சிங் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.மாவட்ட செயலாளர் துரை.மருதன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் கண்ணன், வட்டார தலைவர் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment