Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, May 27, 2020

ஆன்லைன் கிளாஸ் நடத்தினால் கடும் நடவடிக்கை! - கல்வி அமைச்சர் கறார்!


தனியார் பள்ளிகள் ஊரடங்கு காலங்களில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தக்கூடாது என கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார்.தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருப்பதால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் 1 முதல் 9ம் வகுப்புகள் வரை தேர்வுகள் நடைபெறாத சூழலில் அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பள்ளிகள் ஆகஸ்டு மாதம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் பள்ளிகள் சில தற்போதே மாணவர்களுக்கு அடுத்த வகுப்புகளுக்கான பாடங்களை ஆன்லைன் மூலமாக நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஒருபுறம் பாடங்களை குறைப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்பெடுக்கக்கூடாது என்றும், அப்படி செய்யும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிக்கட்டணங்களை இப்போதே பெற்றோர்களிடம் இருந்து வசூலிப்பதையும் தனியார் பள்ளிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment