Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, May 31, 2020

அரசு பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும்: தமிழக அரசு


தமிழகத்தில் நாளை முதல் இயக்கப்பட அரசு பேருந்துகளில், பழைய கட்டணமே வசூலிக்கப்படும், என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மண்டலங்கள் தவிர, மற்ற மண்டலங்களுக்குள் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும், என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனிடையே, நாளை முதல் இயக்கப்பட உள்ள அரசுப் பேருந்துகளில், பழைய கட்டணமே வசூலிக்கப்படும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தனியார் பேருந்துகளும் 60 சதவீத பயணிகளுடன் இயக்கப்பட உள்ளதால், எவ்வளவு கட்டணம் வசூலிப்பது என்பது குறித்து, இன்று மாலை முடிவு செய்யப்படும், என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே, போக்குவரத்து தொழிலாளர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதை கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர், வத்தலக்குண்டு, உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்களிடம் சம்பள பிடித்தம் செய்யக்கூடாது எனவும், பணிக்கு திரும்பும் தொழிலாளர்களுக்கு, சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளபடி, முழு பாதுகாப்பு வசதிகளை ஏற்பாடு செய்து தரவேண்டும், எனவும் கோரிக்கை விடுத்தனர். மேலும், 50% பணியாளர்கள் பணியாற்றும் சூழல் வந்தாலும், சுழற்சி முறையில் பணி வழங்கி, அனைவருக்கும் முழு ஊதியம் வழங்க வேண்டும், எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment