
சேலம்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், அறிவித்தபடி வரும் 15ம் தேதி எஸ்எஸ்எல்சி தேர்வு நடைபெறுவது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்வு நாட்கள் நெருங்க,நெருங்க என்ன செய்வதென்று தெரியாமல், மாணவர்களும், பெற்றோர்களும் பரிதவித்து வருகின்றனர். தமிழகத்தில் நடப்பாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 27ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. மாணவர்கள்,தனித்தேர்வர்கள் என மொத்தம் 9.70 லட்சம் பேர் தேர்வெழுத காத்திருந்தனர்.



No comments:
Post a Comment