பரமக்குடி:ஜூன் 1 முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளுக்கு 90 சதவீதம் மாணவர்கள் கிராமங்களில் இருந்து தான் வருகின்றனர். ஊரடங்கால் போக்குவரத்து வசதி இல்லாத நிலையில் இது சாத்தியம் இல்லை. இதனை கண்டிக்கிறோம்.இந்நிலையில், மே 27 முதல் ஆசிரியர்களுக்கு பிளஸ் 2 விடைத் தாள் திருத்தும் பணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் பாதுகாப்பு நிலை குறித்து அரசு கூறவில்லை. 2020- -21ல் 31 ஆயிரம் ஆசிரியர்கள் ஓய்வு பெறுகிறார்கள்.விடைத் தாள்கள் திருத்தும் பணியை மாநில மையம் அறிவுறுத்தலின் படி புறக்கணிப்போம், என்று ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமாரவேலு தெரிவித்தார்.
Sunday, May 17, 2020
விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment