Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, May 14, 2020

பள்ளிக்கல்வி இயக்குநரின் சுற்றறிக்கைக்கு மாறாக குழுக்கள் அமைப்பு.


பொதுத்தேர்வு குறித்து மாண வர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்க மாவட்டவாரியாக ஆலோசனை குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், ‘‘பத்தாம் வகுப்பு தேர்வு நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடைபெற உள்ளதால் மாணவர்கள் தேர்வுகளை அச்சமின்றி எதிர்கொள்ள சந்தேகங்களை களையவேண்டியது அவசியமாகும்.அதனால் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங் களிலும் தலா ஒரு அலுவலக உதவியாளர் மற்றும் 4 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை பணியமர்த்தி, மாணவர்களின் சந்தேகங்களை சரிசெய்து ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
சுற்றறிக்கைக்கு மாறாக...
அதேநேரம் கல்வித்துறையின் சுற்றறிக்கைக்கு மாறாக 2 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், தலா ஒரு முதுநிலை , பட்டதாரி ஆசிரியர் கொண்ட குழுக்கள் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டு வருவதாக துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

No comments:

Post a Comment