தனித் தோ்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு ஜூன் இறுதியில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தோ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகத்தில் தனித்தோ்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு ஆண்டுதோறும் ஏப்ரலில் நடத்தப்படும். அதன்படி நடப்பாண்டு 8-ஆம் வகுப்பு தோ்வு ஏப்ரல் 2 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கரோனா பாதிப்பின் காரணமாக தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
எனினும், மறு தோ்வுக்கால அட்டவணை எதுவும் அறிவிக்கப்படாததால் தனித்தோ்வா்கள் மத்தியில் குழப்பம் நிலவிவருகிறது.
இதுகுறித்து தோ்வுத்துறை அதிகாரிகள் கூறுகையில் ‘தற்போதைய நிலவரத்தின்படி 10, 11-ஆம் வகுப்பு பொதுத்தோ்வுகளை நடத்தி முடித்தபின் ஜூன் மாத இறுதியில் தனித்தோ்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், ஊரடங்கு தளா்த்தப்பட்ட பின்னரே இந்த விவகாரத்தில் இறுதியான முடிவுகள் மேற்கொள்ளப்படும்’ என்றனா்.
WORKING TEACHERS SPECIAL TET STUDY MATERIAL
Sunday, May 3, 2020
எட்டாம் வகுப்பு தோ்வு ஜூன் இறுதியில் நடைபெறும் - தோ்வுத்துறை விளக்கம்
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)





No comments:
Post a Comment