Subscribe Us

Friday, May 22, 2020

கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் தேர்வு மையம் இல்லை - தமிழக அரசு


கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதியில் 10 , 11, 12 ஆம் வகுப்புக்கான தேர்வு மையங்கள் அமைக்கப்படாது என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதியில் தேர்வு மையம் இருப்பின் மாற்று தேர்வு மையம் அமைக்கப்படும். அவர்களுக்கான சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்.
தேர்வு மையத்திற்கு வரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு முக கவசங்கள் வழங்கப்படும். பிற மாவட்டம், பிற மாநிலத்தில் இருந்துவரும் தேர்வர்களுக்கு முதன்மை தேர்வு மையத்தில் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள தேர்வு மையத்துக்கு வரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து வசதி செய்தி தரப்படும்.
தேர்வானது அனைத்துவித பாதுகாப்புடன் நடத்தப்படும் என தமிழக அரசு ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed