Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, May 3, 2020

புதிய கல்விக்கொள்கை இறுதி அறிக்கை குறித்து ஆலோசனை நடத்தும் மத்திய அரசு.



பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையின் இறுதி வரைவு அறிக்கை தயார் செய்து பல்வேறு அமைச்சகங்களுக்கு அனுப்பியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டலை அடுத்து கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு மத்திய அரசின் கல்விக் கொள்கை தொடர்பான ‘புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவு - 2019’யை கடந்தாண்டு வெளியிட்டது. இந்த கல்விக் கொள்கை வரைவு இந்தியை திணிக்கும் நோக்கத்தில் உள்ளதாகவும், ஏழை மாணவர்களின் கல்வியை பறிக்கும் செயலாக உள்ளது எனவும் தமிழகத்தில் எதிர்க்கட்சிகள், மாணவர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாம் மொழியாக இந்தி கட்டாயம் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து கட்டாயம் என்பது நீக்கப்பட்டு, விரும்பினால் பயிற்றுவிக்கலாம் என்று மாற்றப்பட்டது. இந்த வரைவு அறிக்கை தொடர்பாக கடந்தாண்டு ஜூலை 31ம் தேதி வரை கருத்துகளை தெரிவிக்க மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அவகாசம் அளித்தது. இந்த வரைவு அறிக்கை குறித்து கருத்து கேட்பு கூட்டம் நாட்டில் பல இடங்களில் ரகசியமாக நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், நாடு முழுதும் சுமார் 2 லட்சம் பேர் தங்களது கருத்துக்களை அனுப்பி உள்ளனர். இதனையடுத்து மாநில கல்வி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் ஆலோசனைகள் நடத்தப்பட்டன. தற்போது, அனதை்து கருத்துகளையும் ஆய்வு செய்து இறுதி வரைவு அறிக்கையை மத்திய அரசு தயாரித்துள்ளது. நேற்று முன் தினம் பிரதமர் மோடி புதிய கல்விக்கொள்ளை இறுதி அறிக்கை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். விரைவில் புதிய கல்விக் கொள்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் வாழ்வாதம் இன்றி பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர். ஆனால் அதனைப்பற்றிக் கவலைப்படாத மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையின் மூலம் குருகுல கல்வியை அமல்படுத்த முயற்சிக்கிறது. மத்திய அரசின் இத்தகைய அனுகு முறைக்கு எதிர்க்கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. Hindi படித்தால் நல்லது தானே எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ஹிந்தி ஆசிரியர்களுக்கு பணி கிடைக்கும் ஏன் தடுக்கிறார்கள்

    ReplyDelete