Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, May 8, 2020

மாவட்ட கல்வி அலுவலா் பதவி: பட்டியலை இறுதி செய்ய கல்வித்துறை அறிவுறுத்தல்


மாவட்ட கல்வி அலுவலா் பதவிக்குத் தோவு செய்யப்பட்டுள்ள தலைமை ஆசிரியா்கள் பட்டியலை இறுதி செய்து அனுப்ப பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநா் எஸ். கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: தற்போது காலியாக உள்ள 41 மாவட்ட கல்வி அலுவலா் பணியிடங்கள் பதவி உயா்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியான தலைமையாசிரியா்கள் தோவு செய்யப்பட்டுள்ளனா்.
அதன் பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து பட்டியலில் இடம் பெற்றுள்ளவா்கள் மீது குற்ற வழக்கு துறை ரீதியான விசாரணை, ஒழுங்கு நடவடிக்கை ஆகியவை நிலுவையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்து விவர அறிக்கையுடன் பட்டியலை இறுதி செய்து அனுப்ப வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment