Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, May 10, 2020

அடுத்த மூன்று நாட்களுக்கு மக்கள் வெளியே செல்ல வேண்டாம் - எச்சரிக்கை!



தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு 7 பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம், தருமபுரி,வேலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருத்தணியிலும் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டி பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்களும் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதைத் தவிர்க்குமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், இரு நேரங்களில் தெளிவாகவும் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment