Join THAMIZHKADAL WhatsApp Groups

கரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கப்பட முடியாத சூழ்நிலை நிலவுவதால், வரும் கல்வியாண்டில் பாடப்புத்தங்கள் குறைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுமுடக்கம் காரணமாக ஜூன் மாதம் திறக்க வேண்டிய பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. கரோனா பரவல் பெரும்பாலான மாவட்டங்களில் இன்னும் குறையாததால், பள்ளிகளைத் திறக்க மேலும் கால தாமதம் ஆகும் என்பதால் பள்ளிக்கல்வித்துறை பாடப்புத்தகங்களை குறைக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, 10-ஆம் வகுப்பில் சமூக அறிவியல் பாடத்துக்கு இரண்டு புத்தகங்கள் உள்ள நிலையில் வரும் கல்வியாண்டில் ஒரே புத்தகமாக இருக்கும்.
அதேபோன்று, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களைத் தவிர மற்ற பாடங்கள் ஒரே புத்தகத்தைக் கொண்டிருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரோனா பாதிப்பு காரணமாக 50% பாடப்புத்தகங்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment