Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 29, 2020

PRAGYATA திட்டம் : ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய அரசு வெளியீடு.

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

கொரோனோ ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன இதன் காரணமாக மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளை பள்ளிகள் நடத்தி வருகின்றன இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இந்த நெறிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வடிவமைத்துள்ளது

இதில் ஆன்லைன் கல்விக்கான அறிமுகம் மற்றும் ஆன்லைன் முறை கல்வி என்றால் என்ன? மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கான ஆன்லைன் கல்வி குறித்த விளக்கங்கள்

ஆன்லைன் கல்வி முறையை பின்பற்றும் மாணவர்கள் உடல் நலனை எவ்வாறு பேண வேண்டும்? என்கிற வழிமுறைகள்

ஆன்லைன் கல்வி முறையை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்தான வழிமுறைகள் ஆகியவை இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆன்லைன் கல்விக்கான வழிமுறைகளை கொண்டு அந்தந்த மாநிலங்கள் தங்களின் வசதிகளுக்கேற்ப வழிமுறைகளை வகுத்து கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..


மேலும் மாநில மற்றும் தேசிய அளவில் கொரோனா ஊரடங்கிற்கு பின்பும் ஆன்லைன் கல்வி முறையை நீடித்த ஒரு திட்டமாக கொண்டு செல்வதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் கல்வி அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் மத்திய அரசின் இந்த வழிகாட்டு நெறிமுறையில் வலியுறுத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News