Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 3, 2020

10ம் வகுப்பு தேர்வு ஏற்பாடு தீவிரம்


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொள்வதற்கு, தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள், ஜூன் 15ம்தேதி முதல் 25ம்தேதி வரை நடக்கிறது. தேர்வுக்கு மாணவர்கள் பாதுகாப்பான முறையில் வந்து செல்வதற்கும், துாய்மையான சூழலில் தேர்வு எழுதுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.பத்தாம் வகுப்புகள் செயல்படும் அனைத்து, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் முழுவதையும், தேர்வுக்கு தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இதன்படி, உடுமலை கல்வி மாவட்டத்தில், 60 பள்ளிகள் தயாராக வைத்திருக்க வேண்டியுள்ளது.மேலும், வேறு வேறு மண்டலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுத வருவதற்கு இ-பாஸ் எடுத்துக்கொள்ள வேண்டும்.தேர்வு நடக்கும் மையங்களில், மாணவர் எண்ணிக்கைக்கு போதுமான அளவு தேர்வறைகள் இருப்பதும், மையங்களுக்கு போதுமான அளவு கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் நியமிக்கப்படுவது குறித்தும் கல்வி மாவட்ட அலுவலர்கள் தயார்படுத்தியிருக்க வேண்டுமென, அறிவுறுத்தப்பட்டுள்ளது.தொடர்ந்து, தேர்வு எழுத வரும் விடுதி மாணவர்கள், ஜூன் 11ம் தேதி விடுதிகளுக்கு வந்திருக்க வேண்டும். அவர்கள், தங்குவதற்கான விடுதிகள் துாய்மையாக இருப்பதையும், மாணவர்கள் அன்று விடுதிக்கு வந்திருப்பதையும், அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கண்காணித்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.அன்றைய நாளில் விடுதிக்கு வராத மாணவர்கள் குறித்த விபரங்களை, கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment