Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 15, 2020

முழு ஊரடங்கு ... குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 வழங்கப்படும் - தமிழக அரசு



தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் இது முதல் அலைதான் , மீண்டும் இரண்டாம் அலை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ குழு தெரிவித்துள்ளது .

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகளும், இறப்புகளும் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வர் இன்று மருத்துவ நிபுணர்கள் குழுவோடு கலந்து ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டம் முடிந்த நிலையில் தமிழக நிலவரம் குறித்து மருத்துவ குழுவினர் கூறியுள்ளனர்.

அதில் 'கொரோனா பாதிப்பு உச்சம் பெற்று பிறகு குறையும் என தெரிவித்திருந்தோம். அதன்படியே தற்போது நடந்து வருகிறது. தற்போது உச்சமடைந்துள்ள பாதிப்புகள் மூன்று மாதங்களில் குறைந்துவிடும்' என்று கூறியுள்ளனர். ஆனால் அதற்கு பிறகு இரண்டாவது அலையாக பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்க பொதுமுடக்கம் கடுமையாக்கப்பட வேண்டும் என மருத்துவ குழுவினர் முதல்வரிடம் வலியுறுத்திய நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி பொது முடக்கம் அமலுக்கு வருவதாக தமிழக அறிவித்துள்ளது.

மேலும், சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment