Join THAMIZHKADAL WhatsApp Groups

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலானது தொடர்ந்து அதிகரித்து வந்தது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் தேர்வுகள் ஒத்திவைத்து அறிவிக்கப்பட்ட நிலையில், 10 ஆம் வகுப்பு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டது.
மேலும், பதினோராம் வகுப்பு தேர்வுகள் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் கலந்துகொள்ள இயலாத மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு தருவதாகவும் தமிழக அரசு அறிவித்தது. இந்த சூழ்நிலையில், ஜூன் 1 ஆம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வுகள் துவங்கவுள்ளதாக அறிவிப்பட்ட நிலையில், தேதிகள் நீட்டிப்பு செய்து ஜூன் 15 ஆம் தேதி தேர்வுகள் நடத்துவதாக தமிழக அரசு அறிவித்தது.
கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், ஜூன் 15 ஆம் தேதி தேர்வுகள் நடத்த தடை விதிக்க கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, பத்தாம் வகுப்பு தேர்வுகள் இரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தனர்.
இந்நிலையில், 10,11ஆம் வகுப்பு தேர்வுக்குரிய விடைத்தாள் சேகரிப்பு தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார். விடைத்தாள் சேகரிப்பு, ஒப்படைக்கும் பணிக்கு மாணவர்கள், பெற்றோரை பள்ளிக்கு வரவைக்க கூடாது. அந்தப் பணிகளுக்கு மாணவர்கள்,பெற்றோரை பயன்படுத்தக் கூடாது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்குநர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment