Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, June 18, 2020

எச்சரிக்கை... இந்த செயலிகள் எல்லாம் உங்க மொபைலில் இருக்கா? மிகவும் ஆபத்து!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups



இந்தியா - சீனா மோதலை அடுத்து சமூக வலைத்தளங்களில் சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் பதிவிட்டு வருகின்றனர். அத்துடன் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் எனவும், சீன செயலிகளை பயன்படுத்தக்கூடாது எனவும் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 52 சீன செயலிகளை நீக்க வேண்டும், அல்லது புறக்கணிக்க வேண்டும் என தேசிய புலனாய்வு அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த செயலிகள் மூலம் இந்தியர்களின் தகவல்கள் சீனாவின் வசம் சென்றுகொண்டிருப்பதாகவும், அதன்மூலம் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கை சீன மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே டிக்டாக், யுசி புரோசர், ஹலோ சாட், பப்ஜி கேம், ஷேர் ஹிட், சென்டெர், பியூட்டி ப்ளஸ், கிளின் மாஸ்டர், ஜூம் விடியோ மீட்டிங் உள்ளிட்ட செயலிகளை புறக்கணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதில் ஜூம் செயலி மூலம் வீடியோ மீட்டிங் நடத்துவதினால், இந்தியர்கள் கண்காணிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த செயலிகளால் இந்தியாவின் பாதுகாப்புத் தன்மைக்கு பாதகம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், பயன்பாட்டாளர்கள் இதனை நீக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பற்றது என்ற வகையில் ஜூம் செயலியை தைவான், ஜெர்மன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் புறக்கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட செயலிகள் மூலம் சீனா, பயன்பாட்டாளர்களின் தகவலைக் கொண்டு உளவு பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News