Join THAMIZHKADAL WhatsApp Groups

பிரபல சியோமி நிறுவனம் அதன் 30,000 எம்.ஏ.எச் பேட்டரி பவர் கொண்ட பவர் பேங்க் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பவர் பேங்க்கை பயனர் ஒரு முறை சார்ஜ் ஏற்றிக் கொண்டால் சுமார் 10 முறை அவர்களின் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்துகொள்ள முடியுமென்று சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய பவர் பேங்க் சாதனத்திற்கு மி பவர் பேங்க் 3 குயிக் சார்ஜ் எடிஷன் என்று பெயரிட்டுள்ளது. இந்த புதிய பவர் பேங்க் ஒரே நேரத்தில் உங்களுடைய மூன்று சாதனங்களை சார்ஜ் செய்ய முடியும் .புதிய 30000 எம்ஏஎச், மி பவர் பேங்க் 3 குயிக் சார்ஜ் எடிசன் முதற்கட்டமாகச் சீனாவில் ஜூன் 18 ஆம் தேதி முதல் சியோமி வலைத்தளத்தில் கிடைக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய சந்தையில் எப்பொழுது அறிமுகம் செய்யப்படுமென்றும் இன்னும் தகவல் வெளியாகவில்லை. இந்திய மதிப்பின்படி இந்த பவர் பேங்க் சுமாராக ரூ.1800 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment