Join THAMIZHKADAL WhatsApp Groups
Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகாத நிலையிலும், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமடைந்துள்ளது.தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிந்தவுடன் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், தேர்வுத்தாள் திருத்தும் பணிகள் தள்ளி வைக்கப்பட்டன. அதுமட்டுமின்றி கடைசி தேர்வை தமிழகம் முழுவதும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதவில்லை. இந்நிலையில் கடந்த சிலவாரங்களுக்கு முன், தேர்வுத்தாள் திருத்தும் பணி தொடங்கி, முடியும் நிலையில் உள்ளது. ஆனால், கடைசி தேர்வு, ஜூன், 18ல் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரசு சமீபத்தில் தேர்வு குறித்து வெளியிட்ட அறிக்கையால் அந்த தேர்வு நடக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால், பிளஸ் 2 தேர்வு முடிவுஎப்போது வெளியாகும் என்று கணிக்க முடியவில்லை. ஆனால், தனியார் பொறியியல் கல்லூரிகளில், தற்போதே மாணவர் சேர்க்கைக்கு பெற்றோருக்கு போன் செய்ய தொடங்கிவிட்டனர். பள்ளிகள் மூலம் மாணவர்களின் மொபைல் போன் எண்ணை பெற்றுக்கொண்ட தனியார் பொறியியல் கல்லூரிகள், பெற்றோரிடம் பேசி, தங்கள் கல்லூரியில் உள்ள சிறப்பு அம்சங்கள், கட்டணம் குறித்து பேசி வருகின்றனர். திருப்தியடையும் பெற்றோர், சேர்க்கைக்கான உறுதியை அளிக்கின்றனர். இதேபோல், தமிழகத்தில் உள்ள பல கல்லூரிகள் தங்கள் பணியாளர்கள் மூலம் மாணவர்கள் சேர்க்கைக்கு முயன்று வருகின்றனர்.
Join THAMIZHKADAL WhatsApp Groups
No comments:
Post a Comment