Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, June 3, 2020

10ம் வகுப்பு ரிசல்ட்டுக்கு பிறகுதான் பள்ளிகள் திறப்பு - அமைச்சர் செங்கோட்டையன்!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 15ம் தேதி தொடங்க உள்ள நிலையில் தேர்வு முடிவகளுக்கு பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பத்தாம் வகுப்பு பொது தேர்வு மொத்தமாகவும், 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு சில பாடங்களுக்கான தேர்வுகளும் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டன. இந்த தேர்வுகள் ஜூன் 15 முதல் தொடங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் அதற்கான கால அட்டவணையும் வெளியிட்டுள்ளனர்.
மாணவர்கள் தேர்விற்கு சென்று வர பேருந்துகளை ஏற்பாடு செய்வது, விடுதிகளை திறப்பது, முகக்கவசங்கள் அளிப்பது என அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பள்ளிகள் திறப்பது எப்போது என்பதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர் பத்தாம் வகுப்பு தேர்வுகள் முடிந்து அவர்களுக்கு ரிசல்ட் வெளியான பிறகுதான் பள்ளிகள் திறப்பதை குறித்து ஆலோசிக்க முடியும் என தெரிவித்துள்ளார். மேலும் காலதாமதமாக பள்ளிகள் தொடங்குவதால் மாணவர்களுக்கு பாடங்களை குறைப்பது குறித்து கல்வியியல் வல்லுனர்களை கொண்டு ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment