Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, June 3, 2020

10 - ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் உடன் முகக்கவசங்கள்!!



10 - ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் உடன் முகக்கவசங் களையும் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் , மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வழி யாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பப்பட் டுள்ள சுற்றறிக்கை விவரம் :

பொதுத்தேர்வை நல்முறையில் நடத்த பள்ளி தலைமையாசிரியர் கள் , முதல்வர்கள் அரசின் அறிவுர கைளை பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் . அதன்படி பள்ளி வளாகத்தை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும் .

இதுதவிர விடைத்தாளுடன் முகப்பு சீட்டை தைத்து தயாராக வைத்திருக்க வேண்டும் . அதனு டன் கூடுதல் விடைத்தாள்கள் மற் றும் சிறப்பு உறைகளை மாவட்ட தேர்வுத்துறை அலுவலகத்தில் முன்னரே பெற்றுக்கொள்ள வேண் டும் .அதேபோல் , மாணவர்களின் பழைய நுழைவுச்சீட்டையே எந்த மாற்றமும் இன்றி பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது . நுழைவுச்சீட்டில் முதன்மை தேர்வு மையத்தின் பெயரும் , தங்கள் பள்ளிகளின் பெயரும் இடம்பெற்றிருக்கும் .

எனவே , மாணவர்களுக்கு தேர்வு நடை பெறும் பள்ளிகளின் விவரத்தை முன்கூட்டியே தெரிவிக்க வேண் டும் . வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு சென்ற மாணவர்கள் சொந்த இருப்பிடத் துக்கு திரும்பிவிட்டதை உறுதி செய்ய வேண்டும் .

அதேபோல் , மாணவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு ( ஹால் டிக்கெட் ) வழங்கும்போதே முகக் கவசமும் தரவேண்டும் . 10 - ம் வகுப்பு மாணவருக்கு 3 முகக் கவசமும் ,
பிளஸ் 1 , பிளஸ் 2 மாண வருக்கு தலா ஒரு முகக்கவசமும் வழங்க வேண்டும் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment