Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 10, 2020

11-ம் வகுப்பில் ரத்து செய்யப்பட்ட பாடங்களில் அனைவரும் ஆல் பாஸ் .!



11-ம் வகுப்பில் ரத்து செய்யப்பட்ட பாடங்களில் மட்டும் தேர்வு எழுதிய, எழுதாத மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவார்கள் என தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் நடைபெறாமல் உள்ள 11-ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்வதாகவும் அறிவித்தார். இதையடுத்து, பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாகவும் அறிவித்தார். இந்நிலையில், பொதுதேர்வு ரத்து செய்தற்கான அரசாணை இன்று வெளியிடப்பட் டது. அதில், 11-ம் வகுப்பில் ரத்து செய்யப்பட்ட வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் பாடங்களில் மட்டும் அனைவரும் தேர்ச்சி பெறுவார்கள் என தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment