Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 10, 2020

சி.பி.எஸ்.இ. தேர்வுகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்!



ஜூலை மாதம் நடத்த திட்டமிட்டுள்ள சி.பி.எஸ்.இ. தேர்வுகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற ராணுவ வீரர் அமித்பத்லா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கொரோனா தொற்று அதிகரிக்கும் என எய்ம்ஸ் மருத்துவமனை கணித்துள்ள ஜூலை மாதத்தில், 1 முதல் 15ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்புக்கான சி.பி.எஸ்.இ. தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். 3 ஆயிரம் தேர்வு மையங்களில் நடைபெறவிருந்த தேர்வு, தற்போது 15 ஆயிரம் மையங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் கிராமப் புறங்களிலும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனவே ஜூலை மாதத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவானது உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment