Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 26, 2020

ஒருவருக்கு கோவிட் -19 தொற்று எவ்வாறு ஏற்படுகிறது? - ஒரு உலகளாவிய கருத்து

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
கொரோனா பரவலில், ஒரு பொருளின் மேற்பரப்பில் ஏற்படும் மாசு, பிறருடன் மேற்கொள்ளும் சந்திப்புகள் போன்றவற்றை விட நெருக்கமான நபர்களுக்கிடையே ஏற்படும் தொடர்புகள் கொரோனா தொற்று உண்டாக்கும் அபாயம் கொண்டவை.

கொரோனா வைரஸ் நெருக்கடி தொடங்கி ஆறு மாதங்கள் ஆகின்றன. ஆனால், அனைவருக்கும் இடையில் ஒரு பொதுவான கேள்வி சுற்றி வருகிறது. அது-

மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள்?

பொதுவாகவே, ஒரு அசுத்தமான மேற்பரப்பில் இருந்து கோவிட் -19 தொற்று உண்டாவதில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வெளியில் உள்ளவர்களுடன் மேற்கொள்ளும் சந்திப்புகள், கொரோனா வைரஸை பரப்ப வாய்ப்பில்லை. ஆனால், நமக்கு நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களே இதற்கு காரணமானவர் ஆவர். நபர்களுக்கு இடையேயான தொடர்புகள், நெரிசல் மிகுந்த நிகழ்வுகள், மோசமாக காற்றோட்டமான பகுதிகள் போன்றவை ஆபத்தை அதிகரிக்கிறது.

அதிகரித்து வரும் இத்தகைய கண்டுபிடிப்புகள், அரசின் பொருளாதாரத்தை மீட்கும் உத்திகளைக் கண்டறிய உதவுகின்றன. பிளெக்ஸிகிளாஸ் தடுப்புகளை நிறுவுதல், கடைகள் மற்றும் பிற இடங்களில் முகக்கவசங்களை அணிதல், நல்ல காற்றோட்டமான அமைப்புகளைப் பயன்படுத்துதல் மற்றும் முடிந்தவரை ஜன்னல்களைத் திறந்து வைத்தல் போன்ற உபாயங்களும் அடங்கும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News