Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 17, 2020

ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு


மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு குறைந்த பகுதிகளில் ஜூலை 1-ந் தேதி முதல் 9, 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளை திறப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கல்வியாண்டு நாட்டில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் மூடப்பட்ட பள்ளிகளில் பெரும்பாலானவை தனிமைப்படுத்தும் மையங்களாக மாற்றப்பட்டு உள்ளன.

கொரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்களும் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே ஜூன் 15-ந் தேதி முதல் (அதாவது நேற்று முதல்) புதிய கல்வியாண்டு தொடங்கப்படும் என்று மகாராஷ்டிரா அரசு தெரிவித்து இருந்தது. இதன்படி பல தனியார் பள்ளிகள் இ-கற்றல் முறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் நடவடிக்கையை தொடங்கி உள்ளன. இந்த நிலையில் சிவப்பு மண்டலம் அல்லாத (கொரோனா பாதிப்பு குறைந்த) பகுதிகளில் 9, 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பாட வகுப்புகள் அடுத்த மாதம் (ஜூலை) 1-ந் தேதி முதல் தொடங்கும் என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்து உள்ளது.

இதேபோல 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பாட வகுப்புகள் ஆகஸ்டு மாதம் முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் பள்ளிக்கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், சில பகுதிகளில் பள்ளிகளை திறக்க முடியவில்லை என்றாலும், மாணவர்களுக்கான கற்பித்தல் செயல்முறையை நிறுத்த முடியாது. மாணவர்களை பாடங்கள் சென்றடைய டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் கூறுகையில், முதல் மற்றும் 2-ம் வகுப்புகளுக்கு ஆன்லைன் கற்பித்தலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் மற்ற வகுப்புகளுக்கு சில மணி நேரங்கள் ஆன்லைனில் பாடம் நடத்த அரசாங்கம் அதற்கான நேரத்தை வரையறுத்துள்ளது.

அகில இந்திய வானொலி அலைவரிசையை பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடத்திட்டம் சென்றடைய முயற்சி செய்து வருகிறோம். சில பாடங்களை ஒளிபரப்பு செய்ய முடியும் என்றார்.

இந்த நிலையில், பள்ளிகளை ஆகஸ்டு மாதமே திறக்க வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment