Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 15, 2020

ஜூன் 21ல் நிகழும் சூரிய கிரகணத்தின்போது வெளியாகும் ஆற்றல் கொரோனா வைரஸை செயலிழக்கும் : வயிற்றில் பால் வார்த்த சென்னை விஞ்ஞானி!



சென்னை : மனித இனத்தைப் புரட்டிப் போட்டுள்ள கொரோனா வைரஸ் சூரிய கிரகணத்தின்போது செயலிழக்கும் என்று சென்னையைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த விஞ்ஞானி சுந்தர் கிருஷ்ணன் என்பவர் அணு மற்றும் புவியியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். இவர் சமீபத்தில் ஏஎன்ஐக்கு அளித்த பேட்டி ஒன்றில், கடந்த டிசம்பர் 26 அன்று நிகழ்ந்த சூரிய கிரகணத்தின்போது வெளியான ஆற்றல் காரணமாகப் அணுவில் பிளவு ஏற்பட்டு பரிணாம வளர்ச்சியில் கொரோனா வைரஸ் உருவாகியுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் அவர் நிரூபர்களிடம் கூறியுள்ளதாவது, 'கொரோனா வைரஸ் 2019ம் ஆண்டு டிசம்பரில் தோன்றி, மனிதர்களை ஆட்டிப்படைத்து வருகிறது. இதற்கிடையே நான் மேற்கொண்ட ஆய்வுகளில் கடந்த டிசம்பர் 26 அன்று தோன்றிய சூரிய கிரகணத்திற்குப் பிறகு நமது சூரியக் குடும்பத்தில் உள்ள கிரகங்கள் தன்னை மறு சீரமைத்துக் கொண்டுள்ளது தெரியவந்தது. டிசம்பர் 26, சூரிய கிரகணத்தின்போது வெளியான ஆற்றல் பூமியிலும் விழுந்தது. இந்த ஆற்றல் காரணமாக பூமியின் வலிமை மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

இந்த மறுசீரமைப்பு காரணமாகப் பூமியின் மேல் பரப்பில் இந்த கொரோனா வைரஸ் தோன்றியிருக்கலாம். அந்த கிரகணத்தின்போது வெளியான ஆற்றல் காரணமாக ஏற்பட்ட சேர்க்கைகள், அணுக்களின் பிளவு காரணமாக குறிப்பிட்ட நியூக்ளியஸ் உருவாக்கம் தொடங்கியிருக்கலாம். இப்படி வளிமண்டலத்தில் ஏற்பட்ட அணுசக்தி தொடர்பு, உயிரியக்கத்தின் கருவாக அமைந்திருக்கலாம். இதன் மூலம் கொரோனா வைரசின் உயிர் மூலக்கூறு கட்டமைப்பின் பிறழ்வு நடந்திருக்க வாய்ப்புள்ளது,' இவ்வாறு அவர் கூறினார்.

இந்த வகை வைரஸ்கள் சீனாவில்தான் தோன்றியது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் கிருஷ்ணா குறிப்பிட்டிருந்தார்.அதே வேளையில் இந்த ஆய்வுகள் சரியாக இருந்தால், வரும் சூரிய கிரகணம் நமக்குத் திருப்பு முணையாக அமையும் எனக் கிருஷ்ணா கூறுகிறார். அதாவது ஜூன் 21ம் தேதி நிகழும் சூரிய கிரகணத்தின்போது சூரியனிலிருந்து வெளியாகும் ஆற்றல் வைரசைச் செயலிழக்கச் செய்துவிடுமாம். சூரிய ஒளியும், சூரிய கிரகணமும் இந்த வைரசிலிருந்து நம்மை பாதுகாக்கும்” என்பதையும் விஞ்ஞானி கிருஷ்ணா பதிவு செய்திருந்தார்.

No comments:

Post a Comment