Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, June 21, 2020

பிளஸ் 2 மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த முடிவு !! அமைச்சர் செங்கோட்டையன்



இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசியதாவது : அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணி 75 சதவீதம் முடிந்துள்ளது.

மீதி பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், துறை அலுவலர்கள் நடத்தை விதிமுறைகள் அடிப்படையில் கருத்துகளை வெளியிடக்கூடாது. இதை கட்டுப்படுத்த உத்தரவிடப்பட்டது.

அனைவரும் தேர்ச்சி என முதலமைச்சர் அறிவித்துள்ளதால் 10ம் வகுப்பு தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற வாய்ப்புள்ளது. சில பள்ளிகளில் ஆன்லைன் மூலமாக தேர்வு நடைபெறுவதாக புகார் வந்துள்ளது.

அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மாத்தூர் என்ற இடத்தில் ரேங்க் கார்டில் கையெழுத்து போடவே மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். அவர்கள் தேர்வு எழுத வரவில்லை.

10ம் வகுப்பிற்கு வழங்கப்படும் மதிப்பெண்கள் குறித்து குழு அறிக்கை பெற்ற பிறகு முடிவு செய்யப்படும். 12 ம் வகுப்பை சேர்ந்த 34,872 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. இவர்களுக்கு மறு தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

25ம் தேதிக்குள் மாணவர்கள் , பெற்றோர்களிடம் தேர்வு எழுத விருப்பம் உள்ளதா ? என்பது குறித்து கடிதம் மூலம் கருத்து கேட்கப்பட உள்ளது. அவர்களிடம் இருந்து பதில் கிடைத்தவுடன் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment