Join THAMIZHKADAL WhatsApp Groups

இந்தியாவில் ஒரு மருந்து சந்தைக்கு வர வேண்டும் என்றால் அதற்கு மத்திய அரசிடம் ஒப்புதல் தேவை. இந்நிலையில், மிக அவசர தேவைக்காக கொரோனா நோய்க்கு பயன்படும் ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்த கடந்த மே 29-ம் தேதி மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது.
அதற்கு சில கட்டுப்பாடுகளுடன் கடந்த 1-ம் தேதி அனுமதி வழங்கியது. இதனால், ரெம்டெசிவிர் மருந்து அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. கிலீட் சைன்சஸ் என்ற நிறுவனத்தால் இந்த ரெம்டெசிவிர் மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அதிகம் பரவி உள்ள அமெரிக்காவிலும் ரெம்டெசிவிர் மருந்து அவசர தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் ரெம்டெசிவிரை தயாரிக்க 6 மருந்து நிறுவனங்கள் மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது. அதில், 5 நிறுவனங்கள் கிலீட் சைன்சஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளன.
ரெம்டெசிவிர் மருந்து ஊசி மூலம் செலுத்தப்படும். கர்ப்பிணிகள், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், தாய்மார்கள் ஆகியோருக்கு இந்த மருந்து ஏற்றது இல்லை என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் வென்டிலேட்டர் இல்லாமல் சாதாரண ஆக்ஸிஜன் பெற்று வருபர்களுக்கு இந்த மருந்தை கொடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
No comments:
Post a Comment