Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, June 18, 2020

33 மாவட்டத்திற்கும் கொரோனா தடுப்பு அதிகாரிகள் நியமனம்.. பீலா ராஜேஷிற்கும் மாவட்டம் ஒதுக்கீடு.!!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கமானது அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட பல சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். சென்னையில் அமைச்சர்கள் தலைமையிலும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்பட்டுள்ளனர். இது குறித்த உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் 33 மாவட்டங்களுக்கு மாவட்ட வாரியான சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளனர். இந்த அதிகாரிகள் கொரோனா கட்டுப்பாடு மற்றும் சிறப்பு பணிகளில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக கிருஷ்ணகிரி மாவட்ட சிறப்பு அதிகாரியாக பீலா ராஜேஷ், கடலூர் மாவட்டத்திற்கு சுகன்தீப் சிங் பேடி, கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு ஹர்மந்தர் சிங், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சந்திரமோகன், சேலம் மாவட்டத்திற்கு நசிமுதீன், அரியலூர் மாவட்டத்திற்கு சரவணவேல்ராஜ், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பிரதீப் யாதவ், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தீரஜ் குமார், விழுப்புரம் மாவட்டத்திற்கு முருகானந்தம், தென்காசி மாவட்டத்திற்கு அனு ஜார்ஜ், நீலகிரி மாவட்டத்திற்கு சுப்ரியா சாகு, தர்மபுரி மாவட்டத்திற்கு சந்தோஷ் பாபு, நாமக்கல் மாவட்டத்திற்கு தயானந்த் கட்டாரியா, தேனி மாவட்டத்திற்கு கார்த்திக், மதுரை மாவட்டத்திற்கு தர்மேந்திர பிரதாப் யாதவ், ராணிப்பேட்டை மாவட்டத்தில் லட்சுமி பிரியா, திருப்பூர் மாவட்டத்திற்கு கோபால், வேலூர் மாவட்டத்திற்கு ராஜேஷ் லக்கானி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஜோதி நிர்மலா சாமி, கரூர் மாவட்டத்திற்கு விஜயராஜ் குமார், திருச்சி மாவட்டத்திற்கு ரீட்டா ஹரிஷ் தாகர், விருதுநகர் மாவட்டத்திற்கு மது மதி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு குமார் ஜெயந்த், நாகை மாவட்டத்திற்கு முனிய நாதன், சிவகங்கை மாவட்டத்திற்கு மகேசன் காசிராஜன், திருவாரூர் மாவட்டத்திற்கு மணிவாசன், தேனி மாவட்டத்திற்கு கார்த்திக், நெல்லை மாவட்டத்திற்கு அபூர்வா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News