Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, June 21, 2020

தோல்வி என்ற வார்த்தைக்கே இடம் இல்லை. விநாயகருக்கு 3 வாரங்கள் இந்த தீபம் ஏற்றினால்!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

எந்த ஒரு செயலை தொடங்குவதற்கு முன்பாகவும் விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபட வேண்டும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான்.

இதனடிப்படையில், உங்கள் வாழ்க்கையில் எடுக்கக்கூடிய புதிய முயற்சிகள் எந்தவிதமான தடைகளும் ஏற்படாமல் வெற்றி பாதையை நோக்கி செல்ல வேண்டும் என்றால், உங்கள் வீட்டிலேயே, உங்கள் குடும்பத்தோடு விநாயகரை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும்? எப்படி தீபம் ஏற்ற வேண்டும்? என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பூஜையை வாரம்தோறும் வரும் திங்கட்கிழமை அன்று நம்முடைய வீடுகளில் செய்ய வேண்டும்.

சில பேர் வீடுகளில், பிள்ளையார் மனை வைத்து, அதில் பிள்ளையார் சிலை வைத்து வழிபடும் பழக்கம் இருக்கும். சில பேர் வீடுகளில் பிள்ளையார் சிலையை தனியாகவே வைத்திருப்பார்கள்.

அப்படி உங்கள் வீட்டில் பிள்ளையார் சிலை இருந்தால் அந்தப் பிள்ளையாருக்கு, பாலபிஷேகம் செய்து, சந்தனத்தால் அலங்காரம் செய்து, குங்குமப்பொட்டு வைத்து, அருகம்புல் சாத்தி, எருக்கன் பூ கிடைத்தால் அதிலிருந்து, ஒரு ஐந்து எருக்கன் பூக்களை வைத்து, அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

அதன் பின்பாக, குறிப்பாக முக்கியமாக, எருக்கன் இலை ஒன்று தேவை. அந்த எருக்கன் இலையை விநாயகரின் முன்பாக வைத்து, அதன் மேல், மண் அகல் தீபம், நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றவேண்டும். இந்த வழிபாட்டை குடும்பத்தோடு சேர்ந்து, உங்கள் வீட்டு பூஜை அறையில் செய்து, நீங்கள் தொடங்கப் போகும் காரியம், எந்தவித தடங்கலும் இல்லாமல் நல்லபடியாக தொடங்கி, தோல்வி இல்லாத வெற்றி அடைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டாலே போதும்.

(விநாயகரின் சிலை இல்லை என்றால், விநாயகரின் திருவுருவப் படத்திற்கு முன்பாக இந்த வழிபாட்டினை செய்யலாம். அதாவது நீங்கள் தொடங்கப் போகும் புதிய முயற்சியானது உங்களுக்கு, சில நாட்களுக்கு முன்பாகவே தெரியும் அல்லவா? உங்களது வேலையை தொடங்குவதற்கு முன்பாக, 3 வாரம் திங்கட்கிழமை இந்த பூஜையை செய்து, முடித்துவிட்டு, மூன்று வாரம் பூஜைகள் முடிந்த பின்பு, உங்களது தொழிலாக இருந்தாலும், புதிய முயற்சிகள் எதுவாக இருந்தாலும் தொடங்கிப் பாருங்கள்! கட்டாயம் தோல்விக்கு இடமில்லை.

இதேபோல், வீட்டில் சண்டை சச்சரவு உங்களது. பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்கவில்லை. சரியாக படிக்கவில்லை. உங்கள் கணவர் உங்களது பேச்சை கேட்கவில்லை.

இல்லை, நீங்கள் செய்துகொண்டிருக்கும் தொழிலில் நஷ்டத்தில் செல்கிறது, எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. இப்படியாக தொடர் தோல்வியை சந்தித்து வரும் எந்த ஒரு செயல்பாட்டிற்கும், மூன்று வாரம் திங்கட்கிழமை மட்டும், உங்கள் வீட்டில் இந்த முறைப்படி விநாயகரை மனதார நினைத்து பூஜை செய்து வந்தால், அந்த பிரச்சினைகளுக்கெல்லாம் கூடிய விரைவில் விடிவுகாலம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கையோடு செய்து விக்னங்களை தீர்க்கும் விநாயகரின் அருளாசி பெற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News