Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 22, 2020

பொதுத்தேர்வு மதிப்பெண்கள் சரி பார்க்கும் பணி துவக்கம்


பொதுத்தேர்வு மதிப்பெண்கள் சரிபார்க்கும் பணிகள் இன்று (22ம் தேதி) துவங்குகிறது.உடுமலை கல்வி மாவட்டத்தில், 60 பள்ளிகளில், 2019-2020 பொதுத்தேர்வு எழுத வேண்டிய, 5,048 மாணவர்களுக்கு தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான மதிப்பெண்கள், விடைத்தாள்களில் சரிபார்க்கும் பணிகள், அந்தந்த பள்ளிகளில் நடக்கிறது. மாணவர்களின் விடைத்தாள்கள் சரிபார்த்து, மதிப்பெண்கள் 'டாப்சீட்'களில், ஆசிரியர்கள் பதிவிடுகின்றனர். ஒவ்வொரு பகுதிகளிலும், மாணவர்களின் மதிப்பெண்கள், சரிபார்த்து, 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்ய மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.உடுமலை கல்வி மாவட்டத்தில், எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில், பணிகள் இன்று (22ம்தேதி) முதல் 27ம் தேதி வரை நடக்கிறது. பள்ளி ஆசிரியர்கள், டாப்சீட், மாணவர்களின், மதிப்பெண் பட்டியல், 'ப்ரோகிரஸ் ரிப்போர்ட்' உள்ளிட்ட பதிவுகளை, இந்நாட்களில் மையத்தில் சமர்ப்பித்து சரிபார்க்க வேண்டும். சரிபார்க்கப்பட்ட மதிப்பெண்கள் 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment