
சென்னை : சித்தா சிகிச்சையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட, 61 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர்.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அலோபதி மருத்துவ சிகிச்சையுடன், சித்தா சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், சித்தா டாக்டர் வீரபாபு குழுவினரின், தனித்த சிகிச்சைக்கு, சென்னை, சாலிகிராமத்தில் உள்ள, ஜவஹர் பொறியியல் கல்லுாரியில், 250 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சித்தா மருத்துவ சிகிச்சையை விரும்புவர்களுக்கு மட்டும், சிகிச்சை அளிக்கப்படுகிறது.அங்கு, சித்தா சிகிச்சை பெற்று வந்த, 61 பேர் குணமடைந்து, நேற்று வீடு திரும்பினர்.இதற்கு முன்னதாக, 30 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை, 91 பேர் குணமடைந்து உள்ளனர்.இதுகுறித்து, டாக்டர் வீரபாபு கூறியதாவது:சித்தா சிகிச்சையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், விரைவாக குணமடைகின்றனர். பலரும் சித்தா சிகிச்சையை விரும்புகின்றனர். தற்போது, 210 பேர் சிகிச்சையில் உள்ளனர்.தற்போது, குணமடைந்தவர்கள், 10 நாட்கள், வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.



No comments:
Post a Comment