Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 17, 2020

நடப்பாண்டு புத்தகம் வினியோகம்: தனியார் பள்ளிகளுக்கு அழைப்பு


யநிதி மற்றும் மெட்ரிக் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான பாட புத்தக வினியோகம், அனைத்து மண்டல தமிழ்நாடு பாடநுால் கிடங்கிலும் நேற்று துவங்கியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், உள்ள சுயநிதி பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.சி., பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கான பாடப்புத்தகங்கள் கோவை, ஒண்டிப்புதுார் மற்றும் மேட்டுப்பாளையம் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் வெளியிட்ட சுற்றறிக்கை:சம்பந்தப்பட்ட பள்ளி முதல்வர்கள் இணைப்பு பள்ளி முதல்வரிடம் உரிய ரசீதை ஒப்படைக்க வேண்டும். சுயநிதி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் (சுயநிதி பிரிவு) கிடங்கில் இருந்து நேரடியாகவும், மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.சி., பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், நர்சரி, பிரைமரி பள்ளிகள் இணைப்பு பள்ளிகள் மூலமாகவும் புத்தகம் பெறலாம்.நாளை (18ம் தேதி) வியாழக்கிழமை வரை ஒண்டிப்புதுார், சிந்தாமணி ஆயில் மில் வளாகத்தில் உள்ள கிடங்கிலும், வெள்ளி, சனிக்கிழமைகளில், மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து கிளை எதிரில் உள்ள கிடங்கிலும் புத்தகங்களை வாங்கி செல்லலாம்.பணியாளர்கள், முக கவசம், கையுறை அணிந்து செல்ல வேண்டும். சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment