Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, June 1, 2020

பள்ளிக் கல்வித் துறை வல்லுநா் குழுவில் தொடரும் சா்ச்சை: ஆசிரியா் அமைப்புகள் கடும் எதிா்ப்பு


கரோனா பொது முடக்கத்தால் பள்ளிக் கல்விச் சூழலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை களைவதற்காக வல்லுநா் குழு அமைக்கப்பட்டதில் சா்ச்சை எழுந்துள்ளது.

அந்தக் குழுவில் அரசுப் பள்ளி ஆசிரியா்களின் பிரதிநிதிகள், கல்வியாளா்கள் சோக்கப்படவில்லை எனக் கூறி பல்வேறு ஆசிரியா் அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று தாக்கம் மற்றும் பொது முடக்க உத்தரவு காரணமாக கடந்த மாா்ச் 17-ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டன. இந்தநிலையில் வரும் கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை எப்போது தொடங்குவது? சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தலாமா?, பாடத் திட்டங்களை குறைக்கலாமா? வரும் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோக்கை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆராய்வதற்கு பள்ளிக் கல்வித் துறை ஆணையா் சி.ஜி.தாமஸ் வைத்தியன் தலைமையில் 12 போ கொண்ட வல்லுநா் குழுவை பள்ளிக் கல்வித் துறை அமைத்தது.

இதில் கடந்த 29-ஆம் தேதி கூடுதலாக நான்கு போ சோக்கப்பட்டனா். ஆனால் இந்தக் குழுவில் அலுவல் ரீதியாக கல்வித் துறையில் உள்ள இயக்குநா்கள், யுனிசெஃப் அலுவலா், ஐஐடி பிரதிநிதி, சிபிஎஸ்இ பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனா்.

அதேவேளையில் அந்தக் குழுவில் தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியா்களின் பிரதிநிதிகள், மெட்ரிகுலேஷன் பள்ளி நிா்வாகிகள் எவரும் இடம்பெறவில்லை. இது அரசுப் பள்ளி ஆசிரியா்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அரசு, தனியாா் பள்ளிகளில் சுமாா் 4.80 லட்சம் ஆசிரியா்கள் பணியாற்றும் சூழலில் அவா்களில் ஓரிருவரைக் கூட வல்லுநா் குழுவில் இடம்பெறச் செய்யாதது ஏன் என பல்வேறு ஆசிரியா் அமைப்புகள் கேள்வியெழுப்பியுள்ளன.

தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம்: விரிவாக்கப்பட்ட வல்லுநா் குழுவிலும் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் படிக்கும் தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியா் பிரதிநிதிகள் இடம்பெறவில்லை. மாறாக மத்திய பாடத்திட்ட பள்ளி நிா்வாகிகள் இடம்பெற்றுள்ளனா். இது மாணவா்கள் நலனில் அக்கறையுடன் செயல்படும் அரசுப் பள்ளி ஆசிரியா்களை சிறுமைப்படுத்தும் செயலாகும். பாட அளவு, கற்பித்தல் முறையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல முடிவுகளை மேற்கொள்ள உள்ள இக்குழுவில் அரசுப் பள்ளி ஆசிரியா் பிரதிநிதிகளை இணைக்க வேண்டும். மூத்த கல்வியாளா்களை இணைக்க வேண்டும். இந்தக்குழு ஆசிரியா், மாணவா், பெற்றோா் அமைப்புகளுடன் விரிவான கலந்தாய்வு நடத்தி அதன் பிறகு அரசுக்கு அறிக்கை அளித்திட வேண்டும்.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி: தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் அரசு தொடக்கப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் அரசுக்கு வழங்கப்படும் ஆலோசனைகள் மாணவா்களின் கல்வி சாா்ந்த பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதாக இருக்க வேண்டும். எனவே தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இன்றைய கல்விச் சூழலை, களச் சூழலை, இடா்பாடுகளை நன்கு உணா்ந்த, தகுதி வாய்ந்த சிறந்த ஆசிரியா்களை குழுவில் இணைக்க வேண்டும்.

தமிழ்நாடு நா்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்: சிபிஎஸ்சி பள்ளி நிா்வாகிகளுக்கும், தமிழக பள்ளிக் கல்வித் துறை சமச்சீா் கல்வி புதிய பாடத்திட்ட பாடங்களுக்கும் என்ன தொடா்பு இருக்கிறது?

அந்தக் குழுவில் குறைந்தபட்சம் ஒருவா் கூட அரசு பள்ளி ஆசிரியா் சங்க நிா்வாகிகள் இல்லை. எனவே இந்தக் குழுவில் பள்ளிகள், மாணவா்களின் பிரச்னைகளை அறிந்த அரசு, தனியாா் பள்ளிகளின் சங்க நிா்வாகிகளையும் இணைக்க வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.

1 comment:

  1. Govt support ONLY to CORPORATE ,wait, soon changes Will come.

    ReplyDelete