Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, June 1, 2020

பால் காபியுடன் மாத்திரை உட்கொள்ளலாமா?

தினமும் இரவில் ஒரு டம்ளர் பால் குடித்தால் நல்லது என்று மருத்துவர் அறிவுறுத்துவது உண்டு. ஆனால் பால் வாடை விரும்பாதவர்கள், மாத்திரைக்கு தனியாக தண்ணீர் குடிக்க வேண்டுமே என்று நினைப்பவர்கள் பாலுடன் மாத்திரைகள் எடுத்துகொள்ளும் போது பாலில் இருக்கும் புரதமும், கால்சியமும் மாத்திரையில் இருக்கும் மருந்தின் வீரியத்தை குறைத்து வேலை செய்யவிடாமல் தடுக்ககூடும். இதனால் மருந்தில் இருக்கும் சத்துகளை உடல் உறிஞ்சுக்க்ள்ள முடியாமல் உடல் கழிவோடு மருந்தையும் வெளியேற்றும். குறிப்பாக ஆன் டி பயாடிக் மாத்திரைகள் மருந்து செயல்படவிடாமல் தடுக்க கூடியவை. மூட்டு வலிக்கென பிரத்யேகமான ஊட்டச்சத்து பவுடர்களை மருத்துவர்களே பாலில் கலந்து குடிக்க வேண்டுமெனெ அறிவுறுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தலைவலி மாத்திரையை கூட காபியோடு எடுத்துகொள்ளும் வழக்கம் பலருக்கும் உண்டு. இது மிக தவறான முறை. காபியில் இருக்கும் காஃபின் மாத்திரைகளுடன் வினைபுரிந்து மாத்திரையில் இருக்கும் சத்துக்களை உடலுக்குள் சேராமல் தடுத்துவிடும். காபியில் மாத்திரை போடாவிட்டால் என்ன, மாத்திரைக்கு பிறகு காபி குடித்தால் போதும் என்பவர்கள், அதையும் தவிர்க்க வேண்டும்

No comments:

Post a Comment