JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
ஆன்லைன் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள், சைபர் குற்றங்களில் சிக்காமல், எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்திஉள்ளது.ஏழு கோடி பேர்கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, பள்ளிகளை திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஜூன், 1 முதல், 'ஆன்லைனில்' வகுப்புகள் துவங்கியுள்ளன. பல பள்ளிகள், ஆன்லைன் வகுப்புகளை, தினமும் நடத்தி வருகின்றன.
இந்தியாவில் தற்போதைய நிலையில், ஐந்து முதல் ஏழு வயதுக்கு உட்பட்டவர்கள், ஏழு கோடி பேர், ஆன்லைனில் பாடங்களை படிக்க, மொபைல் போன்களை பயன்படுத்துவதாக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக, சிறுவர் - சிறுமியர், சைபர் குற்றங்கள் மற்றும் ஆன்லைன் மோசடிகளுக்கு ஆளாகி விடாமல், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.கையேடுஇதற்காக, மத்திய அரசின் சார்பில், ஆன்லைன் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இதன் டிஜிட்டல் பிரதியை, www.ncert.nic.in/ என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
No comments:
Post a Comment