Join THAMIZHKADAL WhatsApp Groups
Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
கடலுார் மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் அம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: கடலுார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பணிபுரியும் பெண்களில் 3 ஆயிரத்து 705 பேருக்கு, அம்மா இருசக்கர வாகனம் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. வாகனம் சொந்த நிதியில், வங்கிக் கடன் மற்றும் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று வாங்கலாம்.
மாவட்டத்தில் உள்ள நகரப்புற மற்றும் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த 18 முதல் 45 வயதுள்ள பணி புரியும் பெண்கள், சமூக அமைப்பை சேர்ந்தவர்கள் விண்ணப்பங்களை அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நகராட்சி அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலோ, பேரூராட்சி அலுவலகத்திலோ, நகராட்சி அலுவலகத்திலோ நேரடியாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி அலுவலகம் மற்றும் கடலுார் மகளிர் திட்ட அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Join THAMIZHKADAL WhatsApp Groups
No comments:
Post a Comment