
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்நிலையில் கொரோனா அல்லாத பகுதிகளில் மத்திய , மாநில அரசுகள் தளர்வுகளை அறிவித்து வருகிறது.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் பல தளர்வுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. இங்கு 50% அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயங்கும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம் , திருவள்ளூர் , செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர்த்து ,
பிற மாவட்டங்களில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயங்கும் என்றும் குறிப்பிட்ட மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் 4,400 தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் தெரிவித்தார். பேருந்துகளில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது பயணிகள் முகக்கவசம் அணிய வலியுறுத்தல் உள்ளிட்ட அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படும் என்றும் கூறியுள்ளனர்.



No comments:
Post a Comment