Search This Blog

Sunday, June 7, 2020

ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர பள்ளிக்கல்வித்துறை திடீர் உத்தரவு !!

0 comments

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும் , வரும் 15 ம் தேதி , 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடக்கிறது. அதற்கான பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள் , இடைநிலை , சிறப்பு ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சார்பில் சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது. ஆகையால் நாளை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் 15 ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்த அலுவல்களை கவனிக்க ஆசிரியர்கள் வரவழைக்கப்படுவதாக தெரிகிறது.

No comments:

Post a Comment