JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Sunday, June 7, 2020

புதிய அறிமுகம் விரைவில் !! அனைத்து இயங்கு தளங்களிலும் இனி வாட்ஸ் அப் !!


பிரபல சாட்டிங் செயலியான வாட்ஸ் அப் , விரைவில் அனைத்து மொபைல் பயனார்களுக்கும் பயன்படுத்த கூடியது போல் , வடிவமைக்க இருக்கிறது. அதற்கான வேலையில் வாட்ஸ் அப் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் iOS போன்ற தளங்களில் மட்டும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் விரைவில் அனைத்து தளங்களிலும் இயங்கும் விதமாக Whatsapp பலம் பெறவுள்ளது.

முன்னதாக WhatsApp ஒரு அம்சத்தைக் கொண்டு வந்துள்ளது, இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் புதிய எண்ணைச் சேமிப்பது எளிதாக்கப்பட்டது. இந்த அம்சத்தின் உதவி கொண்டு Whatsapp-ல் புதிய எண்ணைச் சேர்க்க நீங்கள் எண்ணைத் தட்டச்சு செய்யவோ சேமிக்கவோ தேவையில்லை.

QR குறியீட்டை ஸ்கேன் செய்தாலே போதுமானது. QR குறியீட்டை ஸ்கேன் செய்த பின்னர் புதிய எண் சேமிக்கப்படும். Android மற்றும் iOS இன் புதிய பீட்டா பதிப்புகளில் WhatsApp இந்த அம்சத்தைத் தொடங்கியுள்ளது.

இதனிடையே WhatsApp-ன் பிரதான போட்டியாளரான டெலிகிராம் , Whatsapp-னை வீழ்த்துவதற்கான வேலைபாடுகளில் தயாராகி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் இந்த சமூக செய்தி பயன்பாடு பல புதிய அம்சங்களையும் சேர்த்துள்ளது.

மேலும் வீடியோ எடிட்டர், இரண்டு-படி சரிபார்ப்பு , அனிமேஷன் ஸ்டிக்கர்கள், பேசும் ஜிப்கள் மற்றும் பல புதிய அம்சங்கள் பயன்பாட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. வீடியோ அழைப்பின் தேவை அதிகரித்து வருவதால் ,

Whatsapp மற்றும் கூகிள் டியோ ஆகியவை அவற்றின் அம்சத்தில் சில புதுப்பிப்புகளை வெளியிட்டுள்ளன என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். கூகிள் டியோ தங்கள் குழு அழைப்பில் 12 பேர் வரை சேர்க்க அனுமதிக்கிறது. அதே நேரத்தில், Whatsapp தனது வீடியோ அழைப்பு அம்சத்தில் பயனர்களின் எண்ணிக்கையை 8-ஆக உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment