Join THAMIZHKADAL WhatsApp Groups
Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கான புத்தகங்கள் விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலிருந்து சரக்கு வாகனங்கள் மூலம் மற்ற பள்ளிகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது, துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கான புத்தகங்களும், மாவட்டத்திலிருந்து, அந்தந்த வட்டார மையங்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.உடுமலை வட்டாரத்தில், 7,218 மாணவர்கள், துவக்க, நடுநிலைப்பள்ளியில் படிக்கின்றனர். அவர்களுக்கான புத்தகங்கள் பார்க் ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், குடிமங்கலம் வட்டாரத்துக்கு சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. அரசு அறிவிப்பு வந்தவுடன், பள்ளி தலைமையாசிரியர்களை அழைத்து புத்தகங்கள் வினியோகிக்கப்படும் என வட்டாரக் கல்வி அலுவலர்கள் தெரிவித்தனர்.
Join THAMIZHKADAL WhatsApp Groups
No comments:
Post a Comment