Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, June 27, 2020

குணமடைந்தோரை மீண்டும் தொற்றுமா?


கொரோனா தொற்று உலகெங்கும் பரவத் தொடங்கி ஆறு மாதங்கள் ஆகிறது. என்றாலும், 'கோவிட்-19' வைரசைப் பற்றி புரியாத புதிர்கள் இன்னும் இருக்கத் தான் செய்கின்றன. ஒரு முறை தொற்று ஏற்பட்டு, சிகிச்சையால் குணமாகி வீடு திரும்புபவருக்கு மீண்டும் தொற்று ஏற்படுமா என்பதை மருத்துவர்களால் இப்போதும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.அண்மையில், 'நேச்சர் மெடிசின்' இதழில் வெளியாகியுள்ள ஒரு ஆய்வு இதையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சீனாவிலுள்ள வாங்ஷு பகுதியில், கொரோனா தொற்றிய அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வந்த, 37 நோயாளிகள் மற்றும் கொரோனா அறிகுறியே இல்லாத, ஆனால் கொரோனா தொற்றிய, 37 பேரையும் ஒப்பிட்டு அந்த ஆய்வு நடந்தது.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, குணமாகி சென்ற இந்த இரு குழுவினரையும் ஆராய்ச்சியாளர்கள் எட்டு வாரங்களுக்கு கண்காணித்து, ரத்த மாதிரிகளை எடுத்து சோதித்தனர். சோதனையின் முடிவில், அறிகுறியுடன் வந்தோரின் ரத்தத்தில், நோய் எதிர்ப்பணுக்களின் அளவு, 76 சதவீத அளவு குறைந்திருந்தது. கொரோனா தொற்றியும், அறிகுறியே இல்லாமல் வந்து சிகிச்சை பெற்றோரின் ரத்தத்தில், 71 சதவீத அளவுக்கு எதிர்ப்பணுக்கள் குறைந்திருந்தன. இதனால் அவர்களுக்கு மீண்டும் தொற்று வரலாம் என்று சொல்ல முடியாது என, ஆய்வு மருத்துவர்கள் தெரிவித்துஉள்ளனர். கொரோனாவை இன்னும் நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை மட்டுமே இந்த ஆய்வுகள் காட்டுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் அக்கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment