Join THAMIZHKADAL WhatsApp Groups

பிரிட்டனை சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் மற்றும் மருந்து நிறுவனமான அஸ்ட்ரா செனகா இணைந்து சோதித்து வரும் கொரோனா தடுப்பூசி ஆய்வகத்தை விட்டு வெளியே வருகிறது.இந்த தடுப்பூசியை பிரிட்டனுக்கு வெளியே, பிரேசிலில், 3,000 பேருக்கு போட்டு, பலன் தருகிறதா என்ற சோதனை அண்மையில் தொடங்கியது. பிரேசிலின் சாவோ பாவ்லோ நகரிலுள்ள, 2,000 மருத்துவ பணியாளர்களுக்கும், ரியோ டி ஜெனிரோ நகரில், 1,000 பேருக்கும் முதற்கட்ட தடுப்பூசி சோதனை தொடங்கியுள்ளது.கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தரும் மருத்துவ பணியாளர்களுக்குத் தான் முதலில் தடுப்பூசி தேவைப்படுவதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனைகளின் முடிவு டிசம்பர், 2020 வாக்கில் அறிய வரும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.ஆனால், ஆக்ஸ்போர்டின் 'கோவிட் - 19' தடுப்பூசி, வயது முதிர்ந்தோருக்கு அதிக பலன் தராது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
No comments:
Post a Comment