Join THAMIZHKADAL WhatsApp Groups

புவனேஷ்வர்: ஒடிசாவில் நடத்தப்படாமல் இருக்கும் இளநிலை, முதுநிலை கல்லூரி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து நடந்து கொண்டிருந்த அனைத்து பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட சில மாநில அரசுகள், பள்ளி தேர்வுகளை ரத்து செய்துள்ளது.இந்நிலையில் ஒடிசாவில், எஞ்சியுள்ள அனைத்து இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் மற்றும் இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்வதாக மாநில அரசு அறவித்துள்ளது. தேர்வு முடிவுகள் பல்கலை., மானிய குழு எடுக்கும் முடிவின் படி அறிவிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment