Join THAMIZHKADAL WhatsApp Groups
Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
'தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே, விண்ணப்பிக்க வேண்டும்' என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.அவர், நேற்று வெளியிட்ட அறிக்கை:மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில், பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும், தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, தகுதியுள்ள ஆசிரியர்கள், மத்திய அரசுக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம். விருது பெற விரும்புவோர், மத்திய மனிதவள அமைச்சக இணையதளத்தில், ஜூலை 6ம் தேதிக்குள், விண்ணப்பிக்க வேண்டும்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள, வழிகாட்டு நெறிகளை பின்பற்றி, ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்க கூடாது.இவ்வாறு, அவர் குறிப்பிட்டுள்ளார்.
Join THAMIZHKADAL WhatsApp Groups
No comments:
Post a Comment